000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கலைமகள் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a ஞானத்தின் வடிவாய் வீற்றிருக்கும் கலைமகள் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கலைமகள் வெண்தாமரையின் மீது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். இரண்டு கைகளில் வலது கை சிதைந்துள்ளது. இடது கையில் சுவடிகளைக் கொண்டுள்ளார். ஜடாமகுடம் தரித்தவராய், முத்துத் தாமங்கள் தொங்கும் குடையின் கீழ் அமர்ந்துள்ள தேவிக்கு நெற்றியில் தொய்யல்களுடன் கூடிய நெற்றிப்பட்டை அழகு செய்கின்றது. செவிப்பூக்கள், தாடங்கம் என்னும் தோடுகள் காதுகளில் மிளிர்கின்றன. கழுத்தில் கண்டிகை, மணியாரம், முத்தாரம், மார்பில் சன்னவீரம், தோள்களில் வாகுமாலை, தோள் மாலை, கைகளில் தோள் வளை, கடக வளை, விரல்களில் வளையங்கள் ஆகியன விளங்குகின்றன. கால் கட்டை விரல்களில் வளையங்கள் தெரிகின்றன. கணுக்காலில் சிலம்பு காட்டப்பட்டுள்ளது. கணுக்கால் வரையிலான நீண்ட நூலாடை அணிந்துள்ள தேவியின் இடைக்கட்டு முடிச்சு அமர்ந்துள்ள தாமரைப் பீடத்தின் மீது விழுந்துள்ளது. கொசுவம் முன்புறம் காட்டப்பட்டுள்ளது. தேவியின் பின்னால் இருபுறமும் சாமரப் பெண்கள் ஒரு கையில் சாமரத்துடனும், மற்றொரு கையை தொடையில் ஊரு முத்திரையாகவும் கொண்டு நின்றுள்ளனர். இருவரும் அளகசூடகம் என்னும் தலைக்கோலம் கொண்டுள்ளனர். கணுக்கால் வரையிலான நீண்ட நூலாடையின் கொசுவம் இருவருக்கும் முன்புறம் வலது தொடையில் விழுகிறது. மார்பில் குஜபந்தங்கள் காட்டப்படவில்லை. கழுத்தணிகள் இருவருக்கும் வேறுபடுகின்றன. கைகளில் தோள்வளை, முன்வளை அணிந்துள்ளனர். தேவியைப் போன்ற முகபாவனையே இருவருக்கும் காட்டப்பட்டுள்ளது. மேலே இரு கந்தர்வர்கள் ஒரு கையில் மலரைக் கொண்டும் மற்றொரு கையால் வாழ்த்தொலிக்கின்றனர். தேவியின் இருபுறமும் எட்டு முனிவர்கள் அமர்ந்துள்ளனர். |
653 | : | _ _ |a கலைமகள், சரஸ்வதி, வாணி, தஞ்சை பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், இராஜராஜீச்சுவரம், பெரிய கோயில் சிற்பங்கள், தக்ஷிணமேரு, முதலாம் இராஜராஜன், சோழர் கற்றளி, சோழர் கலைப்பாணி, சோழர் கலைக்கோயில்கள், சோழர் கட்டடக்கலை, இடைக்காலச் சோழர் கோயில், தஞ்சாவூர், சோழநாட்டு சிவத்தலங்கள், சோழர்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a தஞ்சை பெருவுடையார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தஞ்சாவூர் |d தஞ்சாவூர் |f தஞ்சாவூர் |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
914 | : | _ _ |a 10.7831901 |
915 | : | _ _ |a 79.13123578 |
995 | : | _ _ |a TVA_SCL_000391 |
barcode | : | TVA_SCL_000391 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |